Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொண்டத்து காளியம்மன் கோவில் ராஜ ... ஆடி சோமவாரம்; மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் ஆடி சோமவாரம்; மதுக்கரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூர் கந்தசுவாமி கோவில் முழுநேரம் திறந்திருக்க எதிர்பார்ப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்போரூர் கந்தசுவாமி கோவில் முழுநேரம் திறந்திருக்க எதிர்பார்ப்பு

பதிவு செய்த நாள்

10 ஆக
2026
11:08

திருப்போரூர் கந்தசுவாமி கோவில் நடை, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில், பக்தர்களின் வசதிக்காக முழுநேரமும் திறந்திருக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற தலமாக திருப்போரூர் கந்தசுவாமி கோவில் விளங்குகிறது.

அறுபடை வீடுகளுக்கு நிகரான வகையில், இங்குள்ள மூலவர், சுயம்பு மூர்த்தியாகவும், ஸ்ரீசக்ர எந்திர முருகனுக்கு சிறப்பு பிரார்த்தனைகளும், அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.

இக்கோவிலில் நான்கு கால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி மற்றும் ஹிந்துக்கள் பண்டிகை நாட்களில், சிறப்பு வழிபாடு நடக்கிறது. இது தவிர, கந்த சஷ்டி, மாசி பிரம்மோத்சவம், மாணிக்கவாசகர் உத்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்களும் நடக்கின்றன.

செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் விழா மற்றும் விடுமுறை நாட்களில், வந்து கந்த பெரு மானை வழிபடுகின்றனர். இந்நிலையில், வழக்கமாக, காலை 6:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும், மாலை 3:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் நடை திறக்கப்பட்டு சாத்தப்படும்.

ஆனால், கந்த சஷ்டி, மாசி மாத பிரம்மோத்சவம், தைப்பூசம், கிருத்திகை போன்ற விழா நாட்களில் கோவில் நடை முழுநேரமும் திறந்திருக்கும்.

அதேபோல், பக்தர்களின் வசதிக்காக வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமைகளில், கோவில் நடை முழுநேரமும் திறந்திருக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பக்தர்கள் கூறியதாவது: பிரபல கோவில்களுக்கு இணையாக கந்தசுவாமி கோவில் விளங்குகிறது. பல்வேறு வேண்டுதல்களை பக்தர்கள் இங்கு வந்து நிறைவேற்றுகின்றனர். கிருத்திகை போன்ற விழா நாட்களில் கோவில் நடை முழுநேரம் திறந்திருக்கும். மற்ற நாட்களில் மதியம் நடை சாத்தப்பட்டு மாலை திறக்கப்படுகிறது. இதில், ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழுநேரம் திறந்திருந்தால் பக்தர்கள் பொறுமையாக சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக இருக்கும். பல்வேறு பகுதிகளில் இருந்து வருவோர் சுவாமியை தரிசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே, இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar