பதிவு செய்த நாள்
01
பிப்
2013
11:02
திருப்போரூர்: திருப்போரூர், வேம்படி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது.திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் துணைக் கோவிலாகவும், 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகவும், வேம்படி விநாயகர் கோவில் திகழ்கிறது. கடந்த 450 ஆண்டுகளுக்கு முன்பு, கந்தசுவாமி கோவிலில் திருப்பணி செய்ய வந்த, சிதம்பர கவிராயர் இங்கு தங்கி திருப்பணிகளை மேற்கொண்டார்.சிறப்புற்ற இக்கோவிலின் கும்பாபிஷேக திருப்பணிகள், கடந்த செப்டம்பர் மாதம் துவங்கியது. கோவிலின் முன்புறத்தில் உள்ள கருங்கல் மண்டபம், சுண்ணாம்பு நீக்கப்பட்டு பொலிவு பெற்றது. விமானத்தினுடைய சிற்பங்களுக்கு வண்ணம் தீட்டப்பட்டது.திருப்பணி நிறைவு பெற்றுள்ளதால், வரும் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை, திருப்போரூர் கந்தசுவாமி கோவில் செயல்அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.