* பிறர் செய்த உதவியை மறக்காமல் இருந்தால் உங்கள் வாழ்க்கை ஒளிரும். * ஏழை மீது இரக்கம் காட்டுபவன் ஆண்டவருக்கே கடன் கொடுக்கிறான். * வாழ்க்கைத்துணையிடம் அன்பாக நடங்கள். * கடன் கேட்பவருக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். * வெறும் வாய்ப்பேச்சால் எவ்வித பலனும் இல்லை. * பிரச்னையில் இருந்து விலகி இருங்கள். அதுவே மேன்மை அளிக்கும். * மனதை திடமாக வைத்திருங்கள். அப்போது எதிலும் தைரியமாக ஈடுபட முடியும். * தீமை செய்தவருக்கும் நன்மை செய்யுங்கள். * தர்ம பாதையில் சென்றால் பாவங்களை அது மூடிவிடும். * முட்டாள் அரசராக இருப்பதைவிட புத்திசாலி ஏழையாக இருப்பது நல்லது.