உடுமலை அமராவதியில் தீப ஆரத்தி விழா; மழை வேண்டி வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2026 04:08
உடுமலை: உடுமலை அமராவதி அணையில் நடந்த தீப ஆரத்தி விழாவில், மழை வேண்டி பதிகங்கள் பாடி வழிபாடு செய்யப்பட்டது. உடுமலை அமராவதி அணையில், அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் கிராம மக்கள் சார்பில், அமராவதி தீப ஆரத்தி திருவிழா நடந்தது. விழாவிற்கு, வேதாந்தானந்தா தலைமை வகித்தார்.
சுவாமி ராமானந்த மகராஜ், ஸ்ரீமத் விஸ்வலிங்க தம்பிரான், விஸ்வநாதன், ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். செஞ்சேரிமலை ஆதீனம் முத்துராமசாமி அடிகளார், ஆர்ஷ வித்யா பீடம் பூஜ்ய ஸ்ரீ ததேவாநந்த சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை வழங்கினர். கைலாய வாத்தியம், சங்கு நாதம் முழங்க கிராம பெண்கள் அனைவரும் முளைப்பாரி எடுத்து வந்தனர். துறவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அமராவதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள், மழை வேண்டி பதிகங்கள், வேத பாராயணம் மற்றும் 7 அடுக்கு தீப ஆராதனை நிகழ்ந்தது. முன்னாள் அமைச்சர் சண்முகவேலு, பாசன சபை நிர்வாகி பார்த்தசாரதி, கோபாலன் மற்றும் கிராம மக்கள் ஏராளமாக பங்கேற்றனர்.