Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூம்புகார் காவேரி கடல் சங்கமத் ... திருபார்த்தன்பள்ளி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆடி அமாவாசை தீர்த்தவாரி திருபார்த்தன்பள்ளி பார்த்தசாரதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஆடி அமாவாசை தர்ப்பணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஆடி அமாவாசை தர்ப்பணம்

பதிவு செய்த நாள்

12 ஆக
2026
09:08

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் புகழ்பெற்ற காவிரி துலா கட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு , காவிரியில் தண்ணீர் இல்லாததால் நகராட்சி சார்பில் போர்வெல் ஷவர் வாட்டர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


மயிலாடுதுறை நகரில் காசிக்கு இணையாக கருதப்படும் காவேரி துலா கட்டம் அமைந்துள்ளது. 16 தீர்த்த கிணறுகள் அமைந்துள்ள இப்பகுதியில் புனித நீராடுவது சிறப்பம்சமாகும். இங்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். மறைந்த முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளயபட்சம், மத்தியாஷ்டமி உள்ளிட்ட காலங்களில் புனித நீராடி முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி உள்ளிட்ட பலிகர்ம பூஜைகள் செய்வதால் முன்னோர்கள் ஆசி கிடைக்கும் என கூறப்படுகிறது. இதனை அடுத்து காவிரி கரையில் சிறப்பு பூஜைகள் செய்து ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். மேலும்  காவிரியில் தண்ணீர் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.  நகராட்சி சார்பில் ஆற்றின் உள்ளே தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த போர்வெல் ஷவரில் நீராடி தர்ப்பணம் செய்த பொருட்களை அங்கு தேங்கி இருந்த தண்ணீரில் கரைத்து பக்தர்கள் வணங்கி சென்றனர். காவேரி ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் வழக்கத்தை விட இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar