Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆண்டிபட்டி பகுதி கோயில்களில் ஆடி ... பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கோவில்களில் ஆடி அமாவாசை வழிபாடு பொள்ளாச்சி சுற்றுப்பகுதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி அமாவாசை : திருப்புல்லாணி சேதுக்கரையில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
ஆடி அமாவாசை : திருப்புல்லாணி சேதுக்கரையில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

12 ஆக
2026
03:08

திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே சேதுக்கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். சேதுக்கரை மன்னார் வளைகுடா கடற்கரை வளாகப் பகுதிகளில் இன்று அதிகாலை 4:00 மணி முதல் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கரைக்கு நீராடுவதற்காக குவிந்த வண்ணம் இருந்தனர். முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், பித்ரு கடன் உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை புரோகிதர்கள் மூலம் நிறைவேற்றினர். முன்னோர்களுக்கான பிருத்ருக்கடன் பூஜைகளை நிறைவேற்றிய பிறகு சேதுக்கரை கடலில் புனித நீராடினர். சேது பந்தன ஜெய வீர ஆஞ்சநேயர் கோயிலில் நீண்ட வரிசையில் தேங்காய் உடைத்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு மற்றும் அர்ச்சனைகளை செய்தனர்.


சேதுக்கரை அருகே சின்ன கோயிலில் உள்ள வெள்ளை பிள்ளையார், தமிழ் மாமுனிவர் அகத்தியருக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர். அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் புனித நீராடுவதற்காக குவிந்தனர். சேதுக்கரை ஊராட்சி சார்பில் பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பசுக்களுக்கு பச்சரிசி, வெல்லம், அகத்திக்கீரை உள்ளிட்டவைகளை உணவாக கொடுத்தனர். காகங்களுக்கு அன்னமிட்டனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான சிறப்பு பஸ்கள் போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்பட்டன. திருப்புல்லாணி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: ஆடித் திருக்கல்யாணம் விழாவை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரதவீதியில் ஆடித் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஓரிக்கை மணிமண்டபத்தில் குரு வாரத்தை முன்னிட்டு சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டுள்ள காஞ்சி ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஆடிப்பூர தேர் திருவிழா வெகு ... மேலும்
 
temple news
விழுப்புரம்; புகழ்பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ... மேலும்
 
temple news
திருத்தணி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar