பதிவு செய்த நாள்
01
பிப்
2013
11:02
கோவில்பட்டி: கோவில்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் 108 பசுக்கள் வைத்து கோபூஜை நடந்தது. கோவில்பட்டி பைபாஸ் ரோட்டிலுள்ள சீதா ராமலட்சுமண ஆஞ்சநேயர் கோயிலில் 108 பசுக்கள் வைத்து கோபூஜை நடந்தது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனைகள் நடந்தது. அப்போது உலக மக்களின் வாழ்வில் நலன், வளம் பெறவும், ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் உள்ளிட்ட நன்மைகள் பெறவும், குருசாபம், கோசாபம், ப்ராஹ்மண சாபம், சுமங்கலி சாபம், மாத்ரு சாபம், பித்ரு சாபம் உள்ளிட்ட சாபங்கள் நீங்கவும், திருமணத்தடை, கல்வித்தடை, செல்வத்தடை நீங்கவும், சந்தான பாக்கியம், குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியம் வேண்டி 108 பசுக்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் தலைவர் ஜெகநாதன், குரு கணேசன், ரமண்ணா, குருசாமி, முருகன், கோவிந்தராஜ், கண்ணன், பிரம்மநாயகம் ஆகியோர் செய்திருந்தனர்.