Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணியில் பக்தர்கள் 3 மணி நேரம் ... ஸ்ரீருக்மணி க்ருஷ்ண சந்திர விவாஹ மஹோத்சவம் ஸ்ரீருக்மணி க்ருஷ்ண சந்திர விவாஹ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாராயணன் நாமத்தால் நன்மை விளையும்: திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாராயணன் நாமத்தால் நன்மை விளையும்: திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு

பதிவு செய்த நாள்

16 ஆக
2026
11:08

திருப்பூர்: ‘‘நம் பாவ, புண்ணியங்களை மன்னிப்பதால் பெற்ற தாயைவிட இறைவன் உயர்வானவர். நாராயணன் நாமத்தை தொடர்ந்து நம்பிக்கையுடன் உச்சரிப்போருக்கு இறைவன் அருள் கிடைக்கும்,’’ என, ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார்.

திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில், 16-வது ஆண்டு ஆடிப்பூர விழாவையொட்டி, ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு நடந்து வருகிறது. நேற்று ‘ஆண்டாள் அருளிய நாராயணன் நாமம்’ என்ற தலைப்பில் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:

குடும்பத்தில் அண்ணன்–தம்பி, அக்கா–தம்பி, தாய்–மகன் உள்ளிட்ட உறவுகளை தவறான எண்ணங்களால் பிரிப்பது மகாபாவம். ஜோதிடத்தை தினமும் பார்த்து மனக்குழப்பம் அடையாமல், அளவோடு பின்பற்ற வேண்டும். குலதெய்வத்தை மனமுருகி வேண்டி, பிரச்னைகளை இறைவனிடம் கூறுங்கள்.

ஒவ்வொருவரின் பாவ, புண்ணியங்களின் கணக்கு அழியாது. இறைப்பணியில் ஏமாற்றக்கூடாது. நாராயணன் நாமத்தை தொடர்ந்து உச்சரிப்போருக்கு நன்மையே விளையும்.

குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுப்பது பெற்றோரின் கடமை. உணவு உண்ணும் முன் கைகளுடன் கால்களையும் கழுவி, தரையில் அமர்ந்து உண்பது போன்ற நல்ல பழக்கங்களையும் அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar