வல்லபை ஐயப்பன் கோயில் வளாகத்தில் நாக சதுர்த்தி விழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2026 11:08
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் வளாகத்தில் அரச மரத்தடியில் நாகநாதர் சன்னதி உள்ளது. இங்கு நாக சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நாகசதுர்த்தி என்பது நாகதேவதைகளையும் சர்ப தெய்வங்களையும் வழிபடும் பண்டிகையாகும். இது ஆடி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி திதியில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் நாக தேவதைகளுக்கு பால், பழங்கள், மலர்கள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. ராகு கேது தோஷம் மற்றும் கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இந்நாளில் விரதம் இருந்து நாக வழிபாடு செய்கின்றனர். இதனை முன்னிட்டு நாகநாதர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் செய்யப்பட்டது. பூஜைகளை கோயில் தலைமை குருசாமி மோகன் செய்திருந்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.