அழிசூர் வாஞ்சிநாதர் கோவிலில் அம்மையப்பர் திருக்கல்யாணம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2026 11:08
உத்திரமேரூர்: அழிசூர், வாஞ்சிநாதர் கோவிலில் அம்மையப்பர் திருக்கல்யாணம் உத்சவம் விமரிசையாக நடந்தது.
உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூர் கிராமத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ், வாழவந்த நாயகி உடனுறை வாஞ்சிநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நடப்பாண்டிற்கான ஆடி மாத அம்மையப்பர் திருக்கல்யாண உத்சவம் நேற்று முன்தினம் நடந்தது. காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையை தொடர்ந்து, 11:00 மணிக்கு மூலவருக்கு கலசாபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு பன்னிரண்டு திருமுறை ஓதி, பக்தர்கள் சீர்தட்டு, பூத்தட்டு உள்ளிட்ட கல்யாண சீர்வரிசை பொருட்களை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். கோவிலில் யாகபூஜையை தொடர்ந்து, அம்மையப்பர் திருக்கல்யாண உத்சவம் நடைபெற்றது.