கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பரமக்குடி: பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயில் 34வது ஆண்டு ஆவணி திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.ஆக., 9 துவங்கி காப்பு கட்டப்பட்டு விழா நடக்கிறது. தினமும் அம்மன் மீனாட்சி, காமாட்சி, குமரி, மகாலட்சுமி உள்ளிட்ட அலங்காரங்களில் பூஜைகள் நடந்தது.ராஜராஜேஸ்வரியாக கையில் கரும்பு ஏந்தி அம்மன் அருளினார்.நேற்று மாலை வீடுகளில் முளைப்பாரி வளர்த்த பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.இரவு 8:00 மணிக்கு மேல் சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. இன்று(ஆக.18) காலை விரதமிருக்கும் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்.