Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் ... அஷ்டலட்சுமி கோவிலில் வரும் 21ல் வரலட்சுமி ஹோமம் அஷ்டலட்சுமி கோவிலில் வரும் 21ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமி சதேவானந்தா சரஸ்வதியின் ஆன்லைன் ஆன்மிக வகுப்பு செப்., 4ல் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சுவாமி சதேவானந்தா சரஸ்வதியின் ஆன்லைன் ஆன்மிக வகுப்பு செப்., 4ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

19 ஆக
2026
11:08

பெங்களூரு: ஆன்மிக சாதகர்கள், பக்தர்களுக்காக, செப்., 4 முதல், நவ., 13 வரை ஆன்லைன் மூலம், சுவாமி சதேவானந்தா சரஸ்வதி, ஆன்மிக முகாம் வகுப்பு நடத்துகிறார்.

இமய மலையின் அடிவாரத்தில் ரிஷிகேஷ் நகரில், கங்கை நதிக்கரையில் உள்ள பூஜ்ய ஸ்ரீ சுவாமி தயானந்தா ஆசிரமத்தில், வேத சாஸ்திரங்களை பயின்று, முறைப்படி சன்னியாச தீட்சை பெற்றவர் சுவாமி சதேவானந்தா சரஸ்வதி. தினமும் நாட்டின் பல ஊர்களில் ஆன்மிக முகாம் வகுப்புகள் நடத்துவதுடன், தமிழ், ஆங்கிலத்தில் சொற்பொழிவு நடத்தி வருகிறார்.

கோகுலாஷ்டமி துன்பங்கள் அகன்று என்றும் இன்பமுடன் வாழ, ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த கோகுலாஷ்டமி தினமான செப்., 4 முதல், நவ., 13 வரை ஆன்லைனில் ஆன்மிக வகுப்புகள் நடத்துகிறார்.

இந்த வகுப்பில், ஹிந்துகளின் முக்கிய பண்டிகைகளான ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி எனப்படும் கோகுலாஷ்டமி, ஸ்ரீ விநாயக சதுர்த்தி, நவராத்திரி நாயகிகளான ஸ்ரீ துர்கா, ஸ்ரீ லட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி, தீபாவளியன்று ஸ்ரீ மகாலட்சுமியின் அருள் மற்றும் ஆசிகளைப் பெற பின்பற்ற வேண்டிய பூஜை மற்றும் வழிபாடு செய்யும் முறை, சொல்ல வேண்டிய மந்திரங்கள், சுலோகங்கள், அவற்றால் கிடைக்கும் நன்மைகள் விளக்கப்படும்.

இதன் மூலம், வேத சாஸ்திரங்களில் உள்ள ஆன்மிக உண்மைகள், கல்வி, தமிழ் கலாசாரம், பண்பாட்டை மக்களிடம் பரவ செய்யும் ஆன்மிக துாதர்களாக அறப்பணிகளை செய்யவும், மனம், உடல் நலத்துடன் இறையருள் பெற ஆன்மிக சாதனைகளை செய்ய பயிற்சி அளிக்கப்படுகிறது.

நிபந்தனைகள் இதில் சேர, பட்டப்படிப்பு பயின்றவராக இருத்தல்; தமிழ் எழுத படிக்க தெரிந்திருத்தல்; 25 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல்; அறிவு தாகமும், ஆன்மிக ஆர்வமும் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

எளிய வாழ்வில் நாட்டம் உள்ளவர்களாக இருத்தல்; ஜெபம், தியானம், தவம், வேத சாஸ்த்திர ஆராய்ச்சியில் ஆர்வம் அவசியம்;

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒரு மணி நேர வகுப்பில் தவறாமல் பங்கேற்க வேண்டும்; முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே வகுப்பில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படும்.

முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு avg.tamilclass@zohomail.in என்ற மின்னஞ்சல்; 88659 90846 வாட்ஸாப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

ஆக., 25க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆக., 31க்குள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும்.

நேரடி பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் ஆன்மிக சாதகர்கள், பக்தர்கள் பயனடையும் வகையில், அவரவர் வசிக்கும் ஊர்களில் அழைப்பின் பேரில் நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar