பாபநாசம் காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம்; திரளான பக்தர்கள் தரிசனம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2026 05:08
கும்பகோணம்; பாபநாசம் அருகே பிரசித்தி பெற்ற கத்தரிநத்தம் ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஶ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பிரசித்திப் பெற்ற கத்தரிநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானாம்பிகை சமேத6 ஶ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ஆலய மண்டலாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் உள்ள ஸ்ரீ ஞானாம்பிகை அம்பாள் மற்றும் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு த்ரவ்யாபிஷேகம் , லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கணபதி ஹோமங்கள் , கலாசாபிஷேகம் செய்து சிறப்பு மலர் அலங்காரம் நடைப்பெற்று கயிலாய வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உபயதாரர்கள், மற்றும் கத்தரிநத்தம் கோவில் நிர்வாகிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள் , பொதுமக்கள், பக்தர்கள் என திரளானோர் கலந்து கொண்டு சுவாமி சாமி தரிசனம் செய்தனர்.