வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயிலில் முத்துப்பல்லக்கு உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2026 06:08
அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்ட விழாவையொட்டி, முத்துப்பல்லக்கு உற்சவத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி வீராம்பட்டினத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற செங்கழுநீரம்மன் கோவிலில் கடந்த 14ம் தேதி தேரோட்டம் நடந்தது. அதனை தொடர்ந்து, 15ம் தேதி தெப்ப உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு முத்துப்பல்லக்கு உற்சவம் நடந்தது. முத்துப்பல்லக்கில் செங்கழுநீரம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்கதர்களுக்கு அருள்பாலித்தார்.
முத்துப்பல்லக்கு முக்கிய வீதிகளில் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் உறுப்பினர்கள், வீராம்பட்டினம் மக்கள் குழு, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வீராம்பட்டினம் கிராம மக்கள் செய்திருந்தனர்.