கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த சிவனுக்கு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2026 07:08
திருவெண்ணெய்நல்லூர்; திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான் புராணகதையை நினைவுபடுத்தும் வகையில் வாணியச் செட்டியார் வகையறா சார்பில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
மதுரை வைகை அணையில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வீட்டுக்கு ஒருவர் கரையை அடைக்கும் பணிக்கு வர வேண்டுமென பாண்டிய மன்னன் உத்தரவிட்டார். வந்தி அம்மை என்ற மூதாட்டிக்கு உதவி செய்ய சிவபெருமான் கூலி ஆளாக வந்து வந்தியம்மையிடம் கூலி ஆளாக பிட்டு உணவை உண்டு வேலைக்கு செய்ததாக புராணக்கதை உள்ளது. இச்சம்பவம் ஆவணி மூல நட்சத்திரத்தில் நடந்ததாக கதைகளில் பெற்றுள்ளது.அதனை நினைவுபடுத்தும் வகையில் திருவெண்ணெய்நல்லூர் சிவன் கோவிலில் வாணிய செட்டியார் வகையறா சார்பில் கிருபாபுரீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர் போன்றவற்றைகளால் அபிஷேகம் நடந்தது.உற்சவர் கிருபாபுரீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்து மாட வீதி வழியாக வலம் வந்தார். இதையெடுத்து.கள்ளூக் கடை சந்திப்பில் உள்ள மலட்டாட்றில் பகுதியில் இக்கதையை நினைவுபடுத்தும் வகையில் நாடகம் நடத்தப்பட்டது. இறுதியாக பக்தர்களுக்கு பிட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வாணியர் செட்டியார் வகையறா செய்திருந்தனர்.