ஆசூரில் 21 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2026 07:08
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அடுத்த ஆசூரில் ஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம் விழா நடந்தது.ஆசூர் பெரும் தேவி தாயார் சமேத வரதராஜ கோவில் முன்பு 21 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை உள்ளது.அச் சிலை கிராம பொதுமக்களால் புதுப்பிக்கப்பட்டது.அதன் கும்பாபிஷேகத்தை யொட்டி நேற்று முன்தினம் மாலை கணபதி ஹோமம் துவங்கியது.நேற்றுகாலை 8.30 மணிக்கு கலசபுறப்பாடு நடந்து ஆஞ்சநேயருக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜைகளை மாவோவின் பட்டாச்சாரியார் முன்னின்று செய்தார். ஆசூர் மற்றும் சுற்றுப்புற கிராம பொதுமக்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.