Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று ஆவணி அங்காரக பிரதோஷம்; சிவ ... திருமலையில் பவித்ரோற்சவம் பூர்ணாஹுதியுடன் கோலாகலமாக நிறைவு திருமலையில் பவித்ரோற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழங்கால ஓண வழிபாட்டு மரபுகளை உயிர்ப்புடன் காக்கும் பார்த்தல இல்லம்
எழுத்தின் அளவு:
பழங்கால ஓண வழிபாட்டு மரபுகளை உயிர்ப்புடன் காக்கும் பார்த்தல இல்லம்

பதிவு செய்த நாள்

25 ஆக
2026
11:08

பாலக்காடு; ​நவீன கால ஓணக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், நூற்றாண்டுகால பழமையான சடங்குகளையும் ஆன்மிக மரபுகளையும் துளியும் மாற்றாமல் கடைப்பிடித்து வருகிறார் சங்கரநாராயண வாரியர்.


கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஸ்ரீகிருஷ்ணபுரம் மண்ணம்பற்ற பார்த்தல வாரியத்தைச் (இல்லம்) சேர்ந்தவர் சங்கரநாராயண வாரியர். ​பொதுவாக அஸ்த நட்சத்திரத்தில் ஓணப் பூக்கோலம் தொடங்கும் வழக்கம் உள்ள நிலையில், பார்த்தல இவரது வாரியம் (இல்லம்) மரபுப்படி ஆடி (கற்கடக) மாதத் திருவோண நாளிலேயே பூக்கோலம் போட தொடங்குகின்றனர். ஓணப் பூக்கோலத்தின் நடுவில் களிமண்ணால் வைக்கப்படும் ‘மாதேவர்’ உருவங்களுக்குப் பின்னால் ஆழமான ஆன்மிகக் கணக்கீடுகள் இருப்பதாக இவர் சுட்டிக்காட்டுகிறார்.


​இது குறித்து சங்கரநாராயண வாரியர் கூறியதாவது: ​அஸ்தம் முதல் கேட்டை வரை 3 - 2 என்ற எண்ணிக்கையில் விஷ்ணு மற்றும் லட்சுமி உருவங்கள், ​மூலம் நாளில் 5 - 3 என்ற விகிதத்தில் தெய்வ உருவங்கள், ​பூராடம் நாளில் 7 - 5 என்ற வரிசை, ​உத்திராடம் நாளில் 8 - 7 என்ற கணக்கில் பிரதிஷ்டை, ​திருவோணம் நாளில் 11 - 9 என்ற எண்ணிக்கையில் வாமனர், லட்சுமி மற்றும் மகாபலி வடிவங்கள் என ஆகும் பூக்கோல மாதேவர் பிரதிஷ்டை விதிமுறைகள். ​திருவோணத் திருநாளில் முறைப்படி புது ஓணப்புடவை வழங்குதல், அப்பம், அடை மற்றும் பழ வகைகளைப் படைத்து நைவேத்தியம் செய்தல் போன்ற சடங்குகள் முழுமையாக நிறைவேற்றப்படுகின்றன. ​உத்திராட நாள் இரவில் ஊரின் பாணர் சமுதாய மக்கள் வாத்திய முழக்கங்களுடன் மாவேலி மன்னரை வரவேற்க, பெண்கள் பாரம்பரிய ‘நாவோறு’ என்ற பாடலை பாடி வழிபாட்டை முன்னெடுக்கின்றனர். பத்து நாட்கள் சடங்குகளும் நிறைவடைந்து பத்தாம் நாள் வாமனர் நேரில் பிரசன்னமாவார் என்பது இவர்களது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.​தொன்மை வாய்ந்த ‘பூவிளி’ என்ற கூவல்கள் கூட மறக்கப்பட்டு வரும் இக்காலக்கட்டத்தில், முன்னோர்களின் வழிபாட்டு நெறிமுறைகளைத் தொய்வின்றி அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் ஓணம் (திருவோணம்) பண்டிகை கொண்டாட்டங்கள் கேரள பக்தர்களால் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஜெயந்தி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
 புதுச்சேரி: புதுச்சேரி கருவடிக்குப்பம் இடையஞ்சாவடி ரோட்டில் உள்ள வேத வேதாஸ்ரம குருகுலத்தில் ராஜா ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்: குழிப்பாந்தண்டலம் லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில், பவித்ரோத்சவம் விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள், இன்று ஓணம் பண்டிகையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar