திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு, பக்தர் ஒருவர், 27 லட்சம் ரூபாய் செலவில், அன்னதானக் கூடத்தை அமைத்து கொடுக்க முன்வந்துள்ளார். சென்னை நன்மங்கலத்தைச் சேர்ந்த அய்யம்பிள்ளை, திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு, பெரிய அளவில் அன்னதானக் கூடம் கட்டித்தர விருப்பம் தெரிவித்தார். 60அடி நீளமும், 40 அடி அகலம் கொண்ட அன்னதான கூடம், 27 லட்சம் ரூபாய் செலவில் கட்ட, இந்து அறநிலையத் துறையினர் அனுமதியளித்தனர். இதையடுத்து அன்னதானக்கூடம் கட்ட, பூமி பூஜை நடந்தது. கந்தசுவாமி கோவில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் பணியாளர்கள் முன்னிலையில் அய்யம்பிள்ளை குடும்பத்தினர் பணியினை துவக்கி வைத்தனர்.