பதிவு செய்த நாள்
04
பிப்
2013
11:02
திருவள்ளூர்: கோவில் வேப்ப மரத்தில், பால் வடிந்ததைக் கண்டு, பெண்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். பேரம்பாக்கம் அடுத்த, மடப்புகுப்பம் கிராமத்தில், பச்சையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், வேப்ப மரம் ஒன்று உள்ளது. கடந்த மாதம், 31ம் தேதி, இம்மரத்தில் பால் வடிவதாக, தகவல் காட்டுத் தீ போல் பரவியது. இதைக் கேள்விப்பட்ட மடப்புகுப்பம் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், கோவிலுக்கு வந்து, வேப்பமரத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். கடந்த மூன்று நாட்களாக, வேப்ப மரத்தில் பால் வடிந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.