Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி அகோபில வரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலம் ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
சேலம் ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

30 ஆக
2026
10:08

சேலம் தேர் வீதி ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


 சேலம் ராஜகணபதி கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த, 24ல் கணபதி யாகத்துடன் விழா தொடங்கியது. 25ல், 1,008 சுமங்கலி பெண்களுடன் திருவிளக்கு பூஜை நடந்தது. 26ல் சுகவனேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தக்குட ஊர்வலம் புறப்பட்டு, ராஜகணபதி கோவிலை அடைந்தது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜை தொடங்கி, மூலவர், தங்க கொடி மரத்துக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியவை நடந்தது. நேற்று, கோபுரத்தில் கலசம், விநாயகர் உருவ சிலைகளுக்கு கவசம் பொருத்தும் பணிகள் நடந்தன. 2, 3ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. பன்னிரு திருமுறை பாராயணம் செய்யப்பட்டது.


இன்று காலை, 8:10 மணிக்கு விமான கலசங்களுக்கும், 8:30 மணிக்கு மேல் மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு, 8:00 மணிக்கு, பூப்பல்லக்கில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, அறநிலையத் துறையினர், அறங்காவலர் குழு தலைவர் வள்ளியப்பா தலைமையில் நிர்வாகிகள், திருப்பணி உபயதாரர்கள் செய்துள்ளனர்.


எப்போதும் வழிபடலாம் ராஜகணபதியை... பொதுவாக கோவில்களில் மதிய வேளையிலும், இரவிலும் நடை சாத்தப்படும். ஆனால் சேலம் ராஜகணபதி கோவிலில் நடை சாத்தப்பட்டாலும், கதவு வழியே மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் ராஜகணபதியை தரிசிக்க முடியும். இதனால் நள்ளிரவாக இருந்தாலும், மதிய வேளையிலும், வியாபாரிகள், மக்கள் உள்ளிட்டோர், எப்போது வேண்டுமானாலும் ராஜகணபதியை தரிசித்து செல்வர். குறிப்பாக முதல் அக்ரஹாரம் பகுதியை கடந்து செல்வோர், ஒரு நிமிடம் நின்று, கணபதியை தரிசனம் செய்து விட்டே செல்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலசமுத்திரம்: பழநி பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி மாத பிரம்மோற்ஸவ விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு: திருச்சூர் நகரில் ஓணம் பண்டிகையை ஒட்டி நடந்த புலிக்களி நடன நிகழ்ச்சி வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
நம் அண்டை நாடான நேபாளத்தின் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், கடந்த 26ம் தேதி, ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் 4ம் ஆண்டு கஜேந்திர மோட்ச விழா ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோவிலில் 55ம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar