Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மரகத சிலை மாயமான கோவிலில் உற்சவர் ... அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்; முதல்வர் விஜய் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து அன்பும் அறமும் தழைத்தோங்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி வரதர் கோவில் வளாகத்தில் மழைநீர் தேங்குவதால் பக்தர்கள் அவதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சி வரதர் கோவில் வளாகத்தில் மழைநீர் தேங்குவதால் பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

04 செப்
2026
11:09

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், கொடிமரம் அருகே மழைநீர் தேங்குவதால், பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு, தினமும் உள்ளூர், வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் கொடிமரம் சுற்றியுள்ள பகுதியில் சிமென்ட் கல் பதிக்கப்பட்டுள்ளது. கல் பதிக்கும்போது நீரோட்டம் பார்க்காமல் பதிக்கப்பட்டதால், காஞ்சிபுரத்தில் மழை பெய்யும்போது, வரதராஜ பெருமாள் கோவில் கொடிமரம் அருகில் மழைநீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு வழக்கம்போல, கொடிமரம் அருகில் மழைநீர் தேங்கியது. இதனால், நேற்று காலை கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மழைநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, கோவில் கொடிமரம் அருகில் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி ஏற்படுத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மழை பெய்யும்போது, வரதராஜ பெருமாள் கோவில் கொடிமரம் அருகில் தேங்கும் மழைநீர் அரை மணி நேரத்தில் வடிந்துவிடும். இருப்பினும் முற்றிலும் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar