காஞ்சிபுரம்: ஆற்பாக்கத்தில் அமைந்துள்ள நல்லழகி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகம் நிறைவடைந்து ஓராண்டு முடிவடைந்ததை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்கார வழிபாடுகள், நேற்று நடைபெற்றன. இக்கோவிலில், கடந்த ஆண்டு செப்., 4ம் தேதி கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. முதலாண்டு நிறைவு விழாவையொட்டி, நேற்று காலை முதல், மூலவர் திருவாலீஸ்வரர் மற்றும் நல்லழகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் இறைவனும் இறைவியும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இவ்விழாவில் தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பரசன், சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.