சாமி கும்பிடும் போது மனம் ஒருமுகப்பட என்ன செய்ய வேண்டும்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2013 05:02
கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தும் ஐம்புலன்கள். புலன் என்பதற்கு அறிதல் என்று பொருள். இந்த புலன்கள், மனதில் பலவித சிந்தனைகளை மாறி மாறி ஏற்படுத்தும்போது மனம் ஒருநிலைப்படுவதில்லை. இதனால், சாமி கும்பிடும்போது மனம் அலைபாய்கிறது. வாயால் அவன் திருநாமத்தை உச்சரித்து, அதையே காதுகள் கேட்க வேண்டும். பூஜைக்குப் பயன்படும் நறுமணப் பொருட்களையே மூக்கு நுகர வேண்டும். விபூதி, திருமண் தரித்து பாரம்பரிய உடைகளை அணிந்து இறைவனை வணங்கும் செயலில் உடல் ஈடுபட வேண்டும். இப்படி புலன்களை இறைசிந்தனையில் ஈடுபடுத்தி விட்டால் மனமும் ஒருமுகப்பட்டு விடும்.