வருணனுக்கு ஜலாதிபதி என்ற பெயருண்டு. இவர் மேற்குத் திசைக்கு அதிபதி. மேற்கில் பெய்தால் கிழக்கில் சுபிட்சம் என்று சொல்வது இதனால் தான். காவிரி உற்பத்தியாகும் திசை மேற்கு. வருணபகவானுக்குரிய வேதமந்திரம் வருண சூக்தம். இதை வேதியர்கள் ஆறு அல்லது குளங்களில் இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு நூறுமுறை பாராயணம் செய்தால் மழை பெய்யும் என்று சாஸ்திரம் கூறுகிறது.