பிரம்மகுண்டம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா; பக்தர்கள் உற்சாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2026 09:09
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பிரம்மகுண்டத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த பிரம்ம குண்டத்தில் நடைபெற்றமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவிற்கு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் ஆரம்பமானது.இதனைத் தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் செய்து வழிபட்டு வந்தனர்.திருவிழாவின் முக்கிய நாளான நேற்று மாரியம்மன் தேர் பவனி நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பிரம்ம குண்டத்தை சுற்றி உள்ள கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகத்துடன் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.தேர் திருவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.