Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காங்கயம் பரஞ்சேர்வழி ... இலுப்பைக்குடி சுயம்பிரகாசேஸ்வர் கோயிலில் கும்பாபிஷேகம் இலுப்பைக்குடி சுயம்பிரகாசேஸ்வர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

17 செப்
2026
11:09

நெல்லை : உலகின் முதல் நடராஜர் திருமேனி அமையப்பெற்ற நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.


திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரம் தாமிரபரணி நதிக்கரையில் உலகின் முதல் நடராஜர் திருமேனி அமைந்துள்ள செப்பறை அழகிய கூத்தர் திருக்கோவில் உள்ளது. கும்பாபிஷேக விழா செப்.,13ல் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கணபதி, நவக்கிரக, லட்சுமி ஹோமங்கள் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடந்தன. தாமிரபரணி நதியில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு ஆறு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை ஆறாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. ஓதுவா மூர்த்திகள் திருமுறை பாராயணம் பாட, அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடத்தினர். பின்னர் மகா கலசங்களுக்கு தீபாராதனை செய்யப்பட்டு, அர்ச்சகர்கள் கலசங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். மூலவர் அழகிய கூத்தர் விமானம், நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பஞ்ச வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் மற்றும் திருமுறை பாராயணத்துடன் நடந்த கும்பாபிஷேகத்தை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து அழகிய கூத்தருக்கு மகா அபிஷேகமும், மாலையில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம், திருவீதி உலாவும் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar