கள்ளக்குறிச்சி கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23செப் 2026 10:09
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புண்டரீவல்லி தாயார் சமேத கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவம் நேற்று மாலை நடந்தது. அதனையொட்டி, உற்சவர் பெருமாளுக்கு மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, கலசாபிஷேகம் நடந்தது. திவ்ய அலங்காரத்துக்குப்பின் பெருமாள் மண்டபத்தில் எழுந்தருளி சேவை, சாற்றுமுறை நடந்தது. தேசிக பட்டர் பூஜைகளை செய்து வைத்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.