சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கக் கிரீடம் மாயம்!; தீவிர விசாரணை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2026 10:09
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 5.72 சவரன் தங்கக் கிரீடம் மாயமான சம்பவம் அம்பலம் ஆகியுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த 55.72 சவரன் எடை கொண்ட தங்கக் கிரீடம் ஒன்று காணாமல் போயுள்ளது. 5.72 சவரன் தங்கக் கிரீடத்தை எடுத்து விட்டு, அதேபோன்ற போலி கிரீடம் வைக்கப்பட்டது அம்பலம் ஆகி உள்ளது. இந்தக் கிரீடம் 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தை சேர்ந்த பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த நன்கொடை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், தற்போது பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள கிரீடம், அசலின் அதே வடிவத்திலும் அளவிலும் உள்ள ஒரு போலிக் கிரீடமாகும். அதில் வைரங்களைப் போன்ற வெள்ளைக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. நன்கொடையாக வழங்கப்பட்டபோது அந்தக் கிரீடத்தின் எடையை விட, தற்போது பாதுகாப்பு அறையில் உள்ள போலிக் கிரீடத்தின் எடை குறைவாக இருப்பது விசாரணையில் அம்பலம் ஆனது. பாதுகாப்பு அறையில் சிசிடிவி கண்காணிப்பு இல்லை.அசல் கிரீடம் எங்கே என்பது விரிவான விசாரணைக்குப் பிறகே தெரியவரும். இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.