Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்சி ஸ்ரீநிவாச பெருமாள் ... மும்பையில் கோலாகலமாக நடைபெறும் கணபதி கொண்டாட்டம்; நாளை நிறைவு மும்பையில் கோலாகலமாக நடைபெறும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநெல்வேலி வெங்கடாசலபதி கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருநெல்வேலி வெங்கடாசலபதி கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

24 செப்
2026
11:09

திருநெல்வேலி: கிருஷ்ணாபுரம் ஸ்ரீ வெங்கடாசலபதி கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. விழாவில்திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோயிலில், புரட்டாசி பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 16-ம் நூற்றாண்டில் நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்ட இத்திருக்கோயில், ஐந்து அடுக்கு ராஜகோபுரம் மற்றும் மூன்று பிரகாரங்களுடன் சுமார் 1.8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோயில் முழுவதும் அமைந்துள்ள சிற்பங்கள் மற்றும் கட்டிடக்கலை அம்சங்கள் இந்திய தொல்லியல் துறையின் மேற்பார்வையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இக்கோயிலின் மூலவர் ஸ்ரீ வெங்கடாசலபதி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் நான்கு கரங்களுடன் அருள்பாலிக்கிறார். உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசர். மூன்றாம் பிரகாரத்தில் ஸ்ரீ அலர்மேல்மங்கை தாயாருக்கு தனி சன்னதியும் அமைந்துள்ளது.


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் இக்கோயிலில், வைகானச ஆகம முறையிலும் தென்கலை சம்பிரதாயத்திலும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆண்டுதோறும் நடைபெறும் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, கடந்த 10-ம் தேதி கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரவு அங்குரார்ப்பணம் மற்றும் சேனை முதலியார் புறப்பாடு நடைபெற்றது. திருவோண நட்சத்திரமான இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் மற்றும் காலைசந்தி பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அர்த்த மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாசர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து கருடக்கொடியானது சக்கரத்தாழ்வாருடன் சீவிலியில் வைத்து நான்கு மாட வீதிகளில் வலம் வந்தது. தொடர்ந்து கொடி பட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் கொடிமரம், பலிபீடம் மற்றும் கொடிமர காவல் தெய்வமான குத்துப்பிறை இசக்கி அம்மனுக்கு மாபொடி, மஞ்சள், வாசனைப்பொடி, பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட திரவியங்கள் மற்றும் நவகும்ப கலசங்களால் திருமஞ்சனம் நடைபெற்றது. கொடிமரத்திற்கு பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிறைவாக சுவாமிக்கும் கொடிமரத்திற்கும் கோபுர ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி மற்றும் கும்ப ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 11 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாசர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வீதி உலா நடைபெற உள்ளது. வரும் 27-ம் தேதி கருட வாகன புறப்பாடும், அடுத்த மாதம் 2-ம் தேதி திருத்தேர் பவனியும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இணை ஆணையர், நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar