Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் ... 8 ஆண்டுகளுக்கு பிறகு அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு அசாமிலிருந்து யானை வந்தது 8 ஆண்டுகளுக்கு பிறகு அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் மலைக்கு சமையல் பொருட்களுடன் சென்ற தர்கா நிர்வாகிகளுக்கு தடை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் மலைக்கு சமையல் பொருட்களுடன் சென்ற தர்கா நிர்வாகிகளுக்கு தடை

பதிவு செய்த நாள்

25 செப்
2026
12:09

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் அவுலியா தர்காவுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட சமையல் பொருட்களை கொண்டு சென்ற தர்கா நிர்வாகிகளை, போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர்.‌


திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தர்காவில் வழிபாட்டுக்கு முறைதாரர்கள் செல்வதும், அவர்கள், 7 நாட்களுக்கு ஒரு முறை மாறுவதும் வழக்கம். நேற்று காலை முறைதாரர் அப்பாஸ், அவரது குடும்பத்தினர் சமைத்து சாப்பிடுவதற்காக அரிசி, தக்காளி, வெ ள்ளை பூண்டு, வெங்காயம் உள்ளிட்ட சமையல் பொருட்களுடன் சென்றனர். மலைக்குமேல் செல்லும் பாதையில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சமையல் பொருட்களை மலைக்கு மேல் கொண்டு செல்ல அனுமதி இல்லை என தர்கா நிர்வாகியை தடுத்து நிறுத்தினர். இதில் கோபம் அடைந்த அவர்கள், தொடர்ந்து இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பதாகவும், இதனால் மலை மீது உள்ள தர்காவின் சாவியை, போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க இருப்பதாகவும் கூறிச் சென்றனர். சிறிது நேரத்தில் அவர்கள் மீண்டும் மின்அடுப்பு, சமையல் பொருட்களுடன் மலைக்கு செல்ல வந்தபோது, மீண்டும் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, ‘மலைமேல், உணவு சமைக்க கூடாது’ என, உயர் நீதிமன்ற உத்தரவு உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி, ‘மலைமீது உணவு சமைக்கும் பொருட்களை எடுத்துச்செல்ல கூடாது’ என்றும் ‘பேரிச்சம்பழம், பிஸ்கட் போ ன்ற பண்டங்களை மட்டும் எடுத்துச் செல்லலாம்’ என போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி, சிறிது நேரம் கழித்து நிர்வாகிகள் பழங்கள், பேரிச்சம்பழம், பிஸ்கட் உள்ளிட்டவற்றை மட்டும் மலைக்கு எடுத்துச்செல்ல, போலீசார் அனுமதி அளித்தனர்.‌

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நடனமாடும் கோலத்தில் பல தெய்வங்கள் காட்சி அளித்தாலும் நடனத்திற்கு ராஜாவாக இருப்பவர் சிவனே. அதனால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 
temple news
மைசூரு: ‘‘மைசூரு தசரா விழாவை, கொப்பால் கவி மடத்தின் மடாதிபதி அபிநவ கவி சித்தேஸ்வர மஹாசுவாமிகள் துவக்கி ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி மாதம் சதயம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பவித்திர உற்சவ விழாவின் இரண்டாம் நாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar