Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் தோட்ட உற்சவம்; மரமாக ... மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் வேதனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் வேதனை

பதிவு செய்த நாள்

25 செப்
2026
03:09

சிங்கபெருமாள் கோவில்: பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில் வேண்டுதல் திருமஞ்சனம் மீண்டும் நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சிங்கபெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் பழமையான பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற பிரதோஷ திருமஞ்சனம் மற்றும் பிரசாதங்கள் வழங்குவது வழக்கம். இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் திருமஞ்சனம் கோரும் பக்தர்களிடம் தலா 2,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் இந்த கட்டணங்களின் விலை உயர்த்தப்படுவதாக கடந்த பிப்., மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோவில் நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.


இதையடுத்து, விலை ஏற்றம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள நிலையில் பக்தர்களின் வேண்டுதல் திருமஞ்சனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து நம் நாளிதழில் கடந்த ஆக., மாதம் செய்தி வெளியானது. இதையடுத்து, விலை ஏற்றத்துடன் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதற்க்கு மீண்டும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே கடந்த 21ம் தேதி முதல் திருமஞ்சனம் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 


இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: பாடலத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள், தனிக்கட்டணம் செ லுத்தி சுவாமிக்கு திருமஞ்சனம் செய்வது வழக்கம். கடந்த பிப்.,மாதம் திருமஞ்சனம் மற்றும் பிரசாத கட்டணம் உயர்த்தப்படுவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கோவில் நிர்வாகத்தினர் திருமஞ்சனத்தை நிறுத்தி வைத்தனர். புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு வேண்டுதல் வைத்துள்ள பக்தர்கள் மன சங்கடம் அடைந்து வருகின்றனர். கோவிலுக்கு சொந்தமான கடைகளை ஆண்டுதோறும் வாடகைக்கு ஏலம் விடும் பணி நிலுவை யில் உள்ளது. இதனால், திருமஞ்சனம் மற்றும் பிரசாதங்களின் விலையும் அதிகரித்துள்ளது. எனவே பழைய கட்டணத்தில் திருமஞ்சனம் நடத்த ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் புரட்டாசி மாத மகாருத்ர மகாபிஷேகம் நேற்று நடந்தது.சிதம்பரம் ... மேலும்
 
temple news
கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் அடுத்த நல்லாப்பாளையம் சீனுவாசப் பெருமாள் கோவில் பக்தர்கள் ஆதி ... மேலும்
 
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar