Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்தூர் ஊருணியில் கரையாத ... சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் திருப்பாவாடை உற்சவம் சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தெய்வம், தர்மம், தேசம் என்ற மூன்றையும் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் ஆர்.ஆர்.கோபால்ஜி பேச்சு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தெய்வம், தர்மம், தேசம் என்ற மூன்றையும் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் ஆர்.ஆர்.கோபால்ஜி பேச்சு

பதிவு செய்த நாள்

27 செப்
2026
12:09

 சென்னை: ‘‘தெய்வம், தர்மம், தேசம் ஆகியவற்றை இளைஞர்களிடம் கொண்டுச் செல்ல வேண்டும்,’’ என, தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் ஆர்.ஆர்.கோபால் ஜி தெரிவித்தார்.

‘தமிழ் முற்றம்’ அமைப்பின் சார்பில், அதன் நிறுவனர், மறைந்த வேதாந்தம் ஜியை நினைவுகூரும் வகையில், ‘நினைவரங்கம்’ நிகழ்ச்சி, சென்னை, தி.நகரில் உள்ள வேதாந்த பவனில் நேற்று நடந்தது.

இதில், ஆர்.ஆர்.கோபால் ஜி பேசியதாவது:

தமிழும், தமிழ் மக்களின் வாழ்வியல் முறைகளுமான தெய்வம், தர்மம், தேசமும் பின்னிப் பிணைந்தவை. ஆனால், தமிழ் என்பது குறிப்பிட்ட அரசியல் இயக்கங்களுக்கே சொந்தமானது என்ற மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டு உள்ளது. அதை மாற்றி, தமிழின் ஆன்மிகம், பண்பாடு, அறம், தேச சிந்தனையை, இளைய தலைமுறையிடம் கொண்டுச் செல்ல வேண்டும்.

இன்றைய இளைஞர்களிடம் தமிழ் பேசும் முறை மாறி வருகிறது. சுருக்கமான வார்த்தைகள், ‘வாட்ஸாப் தமிழ்’ என, மொழியின் பயன்பாடு மாறினாலும், தமிழின் மீதும் அதன் பண்பாட்டின் மீதும் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து, தமிழகம் முழுதும் செயல்படும் ஒரு அமைப்பாக, ‘தமிழ் முற்றம்’ உருவாக வேண்டும்.

தெய்வம், தர்மம், தேசம் என்ற மூன்று கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களையும், இளைஞர்களையும் தயார்படுத்த வேண்டும். ஆன்மிகம் என்பது வழிபாட்டுடன் மட்டும் முடிவதல்ல. தர்மம், நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும், நம் தெய்வங்கள் மற்றும் பாரம்பரியத்தின் சிறப்பையும் இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆன்மிகம் மற்றும் தேச சிந்தனை கொண்ட பேச்சாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோரை குழுவாக ஒருங்கிணைத்து, நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும்.

நீண்ட காலம் நிலைத்து நிற்கும் வகையில் திட்டங்களை உருவாக்கி, அவற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும். இதற்காக நல்ல குழுவை உருவாக்கி, இளைஞர்களை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். இப்பணியையே வேதாந்தம்ஜி செய்தார். அவரிடம் சிறிது பேசினால், நம் மனதில் தேச சிந்தனையை விதைத்து விடுவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

‘அமுத சுரபி’ மாத இதழ் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் பேசுகையில்,‘‘தீண்டாமை போன்ற கொடுமைகள், ஹிந்து சமயத்தின் அடிப்படை போதனைகளில் கிடையாது என்பதை, அனைவரும் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும். சமூகத்தில் ஊடுருவிய தவறான நடைமுறைகளை, சமயத்தின் அடிப்படைக் கொள்கையாகக் கருதக் கூடாது,’’ என்றார்.

‘கவிதை உறவு’ மாத இதழ் ஆசிரியர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘‘இந்திய பாரம்பரியத்தையும், ஆன்மிக மரபுகளையும் பாதுகாக்க வேண்டும். நாட்டின் பல்வேறு ஆன்மிக, பண்பாடு மற்றும் பாரம்பரிய அடையாளங்களை பாதுகாப்பது அனைவரின் கடமை,’’ என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். அக்., 1 வரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: புரட்டாசி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar