ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் துாய்மைப் பணி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2026 12:09
கள்ளக்குறிச்சி: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் விருத்தாசலம் அஞ்சல் கோட்டம் சார்பில் துாய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, விருத்தாசலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் தலைமை தாங்கி பணியை துவக்கி வைத்தார். மத்திய அரசின் ‘துாய்மையே சேவை 2026’ திட்டத்தின் கீழ், விருத்தாசலம் அஞ்சல் கோட்டம் சார்பில் அரியலுார், கடம்பூர் துணை அஞ்சலகங்களில் பணிபுரியும் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கோவில் வளாகத்தில் துாய்மை பணி மேற்கொண்டு முட்புதர்களை அகற்றினர்.
கள்ளக்குறிச்சி கிழக்கு உட்கோட்ட அஞ்சல் ஆய்வாளர் செல்வகணேஷ் நன்றி கூறினார்.