கடலுார்: திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் பக்தர்களுக்கு திருமண் இடும் சேவை நடந்தது.
கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
இதில், பங்கேற்ற பக்தர்களுக்கு விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் திருமண் இடும் சேவை நிகழ்வு நடந்தது.
மாவட்ட செயலாளர் ஹரிதாசன், மாவட்ட தர்மாச்சாரிய சம்பர்க அமைப்பாளர் சுவாமி கார்த்திகானந்தா சரஸ்வதி, மாவட்ட தர்மபிரசார் அமைப்பாளர் கணேசன், மாவட்ட பஜரங்தள் அமைப்பாளர் ஆசைத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு திருமண் வைத்தனர்.