புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் சத்ய நாராயண பூஜையை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.
புவனகிரியில் மகான் ராகவேந்திர சுவாமிகள் பிறந்த இல்லம் கோவிலாக மாற்றப்பட்டு, பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு காலை சுப்ரபாதத்துடன் நிகழ்ச்சி துவங்கியது.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் சத்யநாராயண பூஜை பல்வேறு ஹோமங்களுடன் நடந்தது. மகான் ராகவேந்திர சுவாமிகளுக்கு சுவேத நதி தீர்த்தத்துடன், பல்வேறு நறுமணங்களுடன் கூடிய திடம் மற்றும் திரவ பொருட்களால் சிறப்புஅபிஷேக ஆராதனை மந்திராலயம் மரபுப்படி நடந்தது. இதில் பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.