மதுரை வந்தார் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திரசரஸ்வதி சுவாமிகள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2026 10:09
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திரசரஸ்வதி சுவாமிகள் , மடத்தின் கிளைக்கு வருகை தந்து கல்வெட்டை திறந்து வைத்தார். மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அம்மனை தரிசிக்க மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுவாமிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
முதல் நிகழ்ச்சியாக சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்திற்கு வந்தார். மடத்தின் கிளை சார்பில் அவருக்கு பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. இங்குள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் தரிசனம் செய்தார். வழி நெடுக வீட்டின் முன் பெண்கள் குத்துவிளக்கேற்றி வரவேற்றனர். இதையடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன்சுவாமி காஞ்சி மடத்திற்கு நன்கொடையாக வழங்கிய அவரது இல்லத்தில் செயல்படும் காஞ்சி மடத்தின் கிளையின் கல்வெட்டை திறந்துவைத்து, விளக்கேற்றி,மஹா பெரியவரின் படத்திற்கு மாலை அணிவித்து பூஜை செய்தார். அங்குள்ள கோசாலையை பார்வையிட்டு நாட்டுமாடுகளுக்கு பழங்களை வழங்கினார். மடத்தில் மாலை நேரக்கல்வி பயிலும் மாணவர்கள், கிராமத்தினருக்கு ஆசி வழங்கினார். இதையடுத்து தேனுார் சுப்ரஜா வளாகத்தில் இன்று இரவு தங்கினார்.