கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு சங்கர தீர்த்த சுவாமிகள் வருகை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2026 10:09
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் பீடாதிபதி சங்கர தீர்த்த சுவாமிகள் வருகை தந்து வழிபாடு செய்தார்.
மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கிராமத்தில் கருப்பனேந்தல் மடத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் முதலாவது ஜீவ ஒடுக்கம் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், தீபாராதனைகளும், தினந்தோறும் அன்னதானமும் நடைபெற்று வருகிறது. நேற்று சங்கரநாராயண பீடத்தின் பீடாதிபதி சங்கர தீர்த்த சுவாமிகள் வருகை தந்ததை முன்னிட்டு அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை கொடுத்து சுவாமிகளை வரவேற்று அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து சுவாமிகள் மடத்தில் நடைபெற்று வரும் திருப்பணிகளை பார்வையிட்டு தவசாலையில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்து சுவாமிகளை வழிபட்டார். கோயில் நிர்வாகிகள்,கட்டிக்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.