அன்னூர் அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2026 10:09
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
அன்னூர் அருகே, செம்மாணி செட்டி பாளையத்தில், 200 ஆண்டுகள் பழமையான அப்பிச்சிமார் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இந்த ஆண்டு மழை வேண்டி விழா நடந்தது. காலை 10:00 மணிக்கு மகா மண்டலி பஜனை துவங்கியது. காலை 11:00 மணிக்கு, அப்பிச்சிமாருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக பூஜையும் இதையடுத்து அலங்கார பூஜையும், நடந்தது. மழை வேண்டி சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. மதியம் 2,000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.