பதிவு செய்த நாள்
28
செப்
2026
12:09
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தும்பூர் வள்ளலார் மடத்தில் அவதார திருநாள் விழா நடந்தது.
விழாவிற்கு, விழுப்புரம் சன்மார்க்க சங்கத் தலைவர் நீலமேகவண்ணன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் ஞானவேல் முன்னிலை வகித்தார். சன்மார்க்க சங்க நிர்வாகி கார்த்திகேயன் வரவேற்றார். தும்பூர் சன் மார்க்க சங்கத் தலைவர் பாபு கொடியேற்றி வைத்தார்.
சன்மார்க்க சங்கத் தலைவர்கள் கோவிந்தசாமி, தணிகாசலம், ரவிச்சந்திரன், சுப்ரமணியன் ஆகியோர் பேசினர்.
மாவட்ட பொருளாளர் இளங்கோ, சன்மார்க்க நிர்வாகிகள் பாண்டியன், தண்டபாணி, மாணிக்கம், ஏழுமலை, கங்கை மணிமாறன், சக்திவேல், தவமணி, சீனுவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.