சூலுார்: புரட்டாசி மாத இரண்டாவது சனிக் கிழமையை ஒட்டி, பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. புரட்டாசி மாத இரண்டாவது சனிக் கிழமையை ஒட்டி, சூலுார் திருவேங்கடநாத பெருமாள் கோவில், காங்கயம்பாளையம், கலங்கல், அப்பநாயக்கன்பட்டி, செலக்கரச்சல் , கள்ளப்பாளையம் ஸ்ரீ பூமி நீளா சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம், அலங்கார பூஜை நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.