Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பருவமழை பெய்து விவசாயம் செழிக்க ... சங்கடஹர சதுர்த்தி, மஹாபரணி: வீட்டு வாசலில் ஒரு தீபம் ஏற்றுங்க.. மகாளய பட்சம் முழுவதிலும் வழிபட்ட பலன் கிடைக்கும்! சங்கடஹர சதுர்த்தி, மஹாபரணி: வீட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இளைஞர்களிடம் தர்ம சிந்தனைகளை வளர்க்க வேண்டும்: காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளுரை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இளைஞர்களிடம் தர்ம சிந்தனைகளை வளர்க்க வேண்டும்: காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளுரை

பதிவு செய்த நாள்

29 செப்
2026
06:09

மதுரை: மனிதனை நல்ல பண்புள்ளவனாக உருவாக்க, இளைஞர்களிடம் தர்மசிந்தனைகளை வளர்க்க வேண்டும் என்று மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளுரை வழங்கினார். மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியா தொழில்நுட்பத்தில் சாதனை படைத்து வருகிறது. தொழில்நுட்பம் நல்ல பலனை அளித்தாலும், அதைப் பயன்படுத்துபவர் நல்லவராக இல்லாவிட்டால் அசம்பாவிதங்கள் நடக்கின்றன. மனிதனை நல்ல பண்பு கொண்டவனாக உருவாக்க வேண்டும். தர்மசிந்தனைகளை மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே கொண்டு செல்ல வேண்டும்.


இந்தியாவில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர். இதுபோன்று நம்நாட்டுக்கு நிறைய வாய்ப்புகளும் இருக்கின்றன. அதற்கு வேண்டிய பணித்திறன் வளர வேண்டும். இந்த தேசத்தில் பிறந்தவர்கள் கஷ்டமில்லாமல், பசி, வியாதி இல்லாமல் வாழ அனுசரணை தேவை. இது பக்தி, ஆன்மிகம் மூலம் சாத்தியமாகிறது. தர்மம் என்பது எந்தளவு நிரந்தரம் என்பதை சிறுவயது முதல் சொல்லித்தர வேண்டும். குலதெய்வ வழிபாடு, கோயில் தரிசனம், பிரசங்கம் கேட்பது, அன்னதானம் செய்வது மனிதனுடைய மனோபாவத்தை சரியான வழியில் செலுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.


மதுரை நகர் சங்க சாலக் மங்களமுருகன், மாவட்ட சங்க சாலக் சந்திரன் ஏற்பாடு செய்திருந்தனர். பின்னர் சொக்கிகுளம் பெசன்ட் ரோட்டில் உள்ள காஞ்சி காமகோடி மடத்திற்கு சென்ற அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. வரவேற்பு கமிட்டியினர் டாக்டர் ராமசுப்ரமணியம், பிரசாத், ஏ.பி.சுந்தர், ஸ்ரீகுமார், வெங்கடேசன், ஸ்ரீராமன் அவரை வரவேற்றனர். பின்னர் சமஸ்கிருதம், தமிழில் வரவேற்பு பத்திரம் வாசிக்கப்பட்டது. பக்தர்களுக்கு ஆசியும், பிரசாதமும் வழங்கினார்.


சோழவந்தான்:  முன்னதாக சோழவந்தான் அருகே திருவேடகம் வந்த காஞ்சி சுவாமிகள், 1928ல் இங்கு வியாச பூஜை செய்து வழிபட்டதன் நூற்றாண்டு நெருங்குவதை தொடர்ந்து வாதுவென்ற விநாயகர் கோயிலில் வழிபாடு செய்து நினைவு பலகையை திறந்து வைத்தார். வீதிகளில் நடந்து சென்று மக்களுக்கு ஆசி வழங்கினார். வைகையாற்றில் ஏடுஎதிரேறிய இடத்தை பார்வையிட்ட அவர், வைகை ஆறு மாசடைந்திருப்பது கண்டு வருந்தினார். அங்குள்ள விஷ்ணு துர்கையம்மன் கோயில், ஏடகநாதர் கோயிலில் வழிபட்டார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் கடற்கரையில் நாழிக்கிணறு பகுதியில் இருந்து, அய்யா கோவில் வரை சுமார் 100 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar