உடுமலை மடத்தூர் முக்கண்ணப்பர் கோயிலில் தேவாரத் திருவிழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2026 05:09
திருப்பூர்; உடுமலைப்பேட்டை மடத்தூர் முக்கண்ணப்பர் கோவில் அறக்கட்டளை மற்றும் உடுமலை தொண்டர் சீர் பரவுவார் குருகுலம் பேரூர் ஆதீனம் ஆகியமூவரும் இணைந்து தேவாரத் திருவிழா 2026 நிகழ்ச்சியை முக்கண்ணி அம்மை உடன்மார் முக்கண்ணப்பர் கோயிலில் நடந்தது. இதில் முதல் நாள் நேற்று கோவில் வளாகத்தில் கொடியேற்று நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து கண்ணாடி பேழையில் திருமுறைகளை வைத்து வழிபட்டு குத்து விளக்கு ஏற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து தேவார திருவிழா பற்றிய முகவுரை வரவேற்புரை, சிறப்பு சொற்பொழிவு, அருள் ஆசி, திருமுறை பணி செய் சொற்பொழிவு நாட்டிய நிகழ்ச்சி ஆகியன நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்று செவ்வாய்கிழமை காலை 9 மணிக்கு நான்காம் திருமுறை சொற்பொழிவும் அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் ஹோமங்கள் நடைபெற்றன. இதில் முக்கண்ணப்பர் கன்னி அம்மை மற்றும் நடராஜப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் முத்தரனுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்வில் கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.