பெதப்பம்பட்டியில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா சிறப்பு அபிஷேகம், வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01அக் 2026 11:10
உடுமலை: உடுமலை அருகே பெதப்பம்பட்டியில், ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழாவையொட்டி, சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
தமிழ் மாநில ஸ்ரீ விஸ்வகர்மா ஜனநாயக கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில், ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடத்தப்பட்டது. சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் முருகவேல் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் ரவிக்குமார், மாநில அமைப்பு செயலாளர் வெள்ளைச்சாமி, பெதப்பம்பட்டி கிளைச் செயலாளர் மயில்சாமி முன்னிலை வகித்தனர். ஆல்கொண்டமால் கோவிலில் இருந்து தீர்த்தம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. கணபதி பூஜை, கலச ஸ்தாபனம், வேத பாராயணத்துக்கு பின்னர் நவகிரக ஹோமம் உள்ளிட்ட சிறப்பு யாகங்கள் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது.