திருப்பதி தேவஸ்தானத்திற்கு நான்கு பெரிய அடுப்புகள் நன்கொடை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01அக் 2026 11:10
திருப்பதி; புஷ்கர் ப்ராப்பர்டீஸ் (தமிழ்நாடு) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிருதி வாசன் நேற்று புதன்கிழமையன்று திருப்பதி தேவஸ்தானத்திற்கு நான்கு பெரிய அடுப்புகளை நன்கொடையாக வழங்கினார். திருமலை ஸ்ரீவாரி கோயிலின் போட்டு (கோயில் சமையலறை) பகுதியில் வடை தயாரிப்பதற்கு இந்த அடுப்புகள் தேவைப்படுகின்றன. நன்கொடையாளர் சார்பில், அந்நிறுவனத்தின் பிரதிநிதியான முரளி, திருமலையில் உள்ள மாவு அரைக்கும் நிலையத்தில் வைத்து, ஸ்ரீவாரி கோயில் போட்டு பிரிவின் ஏஇஓ முனிரத்னம் இந்த அடுப்புகளை ஒப்படைத்தார்.