Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! அடைக்கல விநாயகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுரண்டை நல்ல அய்யனார் சாஸ்தா கோயிலில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2013
12:02

சுரண்டை: சுரண்டை நல்ல அய்யனார் சாஸ்தா சுடலை மாடசாமி கோயிலில் நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று (7ம் தேதி) நடக்கிறது. சுரண்டை சேனைத் தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட நல்ல அய்யனார் சாஸ்தா, சுடலைமாடசாமி கோயிலில் இன்று (7ம் தேதி) காலை 9 மணிக்கு சேனை விநாயகர், நல்ல அய்யனார் சாஸ்தா, பவனி அய்யனார், வன்னியர் ஆகிய தெய்வங்களுக்கும் மற்றும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட  நல்ல அய்யனார் சாஸ்தா உற்சவர், பாலமுருகன், கொத்தாளி வீரபாகு, தவசிதம்பிரான், பரமசிவன், சப்தகன்னிகள், முண்டசாமி, சுடலை மாடசாமி, கள்வனை வென்றான், கருப்பசாமி, பேச்சியம்மன், பிரம்மசக்தி, புதியவன், பலவேசம் ஆகிய தெய்வங்களுக்கும் மற்றும் விமான கலசத்திற்கும் நூதன பிம்ப அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 5ம் தேதி காலை கணபதி, நவக்கிரக, சுதர்சன, லட்சுமி ஹோமமும், நேற்று 6ம் தேதி இரண்டாம் கால யாகபூஜை, பூர்ணாகுதி, தீபாராதனையும், 3ம் கால யாகபூஜையும் நடந்தது.

இன்று (7ம் தேதி) கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை 6 மணிக்கு நான்காம் கால யாகபூஜை, கோமாதா பூஜை, 7.45க்கு ஸ்பரிசாகுதி, 8 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை, கடம்புறப்படுதல், காலை 8.45க்கு விமான கும்பாபிஷேகம் காலை 9 மணிக்கு நல்ல அய்யனார் சாஸ்தா மற்றும், பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 11 மணிக்கு 5ம் கால யாகபூஜை, மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்குதலும், பகல் 12 மணிக்கு மகேஷ்வரபூஜை, மற்றும் அன்னதானம் நடக்கிறது. நாளை (8ம் தேதி) முதல் தொடர்ந்து 41 நாட்களுக்கு மாலை 4 மணி முதல் 6 மணி வரை மண்டல பூஜை நடைபெறுகிறது. மார்ச் 26ம் தேதி பங்குனி உத்திர சிறப்பு பூஜையும் நடக்கிறது. ஏற்பாடுகளை நல்ல அய்யனார் சாஸ்தா, சுடலை மாடசாமி கோயில் கோமரத்தார்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
கோவை: மகாளய அமாவாசை தினமான இன்று பேரூர் நொய்யல் படித்துறையில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar