Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ... ராஜராஜசோழனின் 1041வது சதய விழா; தஞ்சாவூர் பெரியகோயிலில் பந்தக்கால் முகூர்த்தம் ராஜராஜசோழனின் 1041வது சதய விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி சனிக்கிழமையில் மகாளய அமாவாசை: இன்று மாலை ஒரு தீபம் ஏற்றுங்க.. கோடி புண்ணியம் கிடைக்கும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புரட்டாசி சனிக்கிழமையில் மகாளய அமாவாசை: இன்று மாலை ஒரு தீபம் ஏற்றுங்க.. கோடி புண்ணியம் கிடைக்கும்!

பதிவு செய்த நாள்

10 அக்
2026
11:10

இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.


பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை. ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்றென்கின்றனர். புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு. ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் அமாவாசை இணைந்து வருவது மிக சிறந்ததாகும். 


மஹாளய அமாவாசை அன்று தந்தை வழி மற்றும் தாய் வழி மற்றும் நம் உறவினர்கள் அனைவருக்கும் தர்ப்பணம் கொடுப்பது மிக சிறந்ததாகும்  இந்நாளில் முன்னோர்களை நினைத்து வழிபட்டு அவர்கள் அருள் பெற வேண்டும். பூலோகத்திற்கு தங்கள் பிள்ளைகளை பார்க்க வந்த முன்னோர் மீண்டும் பிதுர்லோகத்திற்கு இன்று திரும்புவதாக ஐதீகம். இந்நாளில் தீர்த்தக் கரைகளில் நீராடுவதும், பிதுர் வழிபாடு செய்து அவர்களை  வழியனுப்பி வைப்பதும் குடும்பம் செல்வச்செழிப்புடன் வாழ உதவும். 


தீபம் ஏற்றுங்க: சிறப்பு மிக்க இன்றைய நாளில் மாலை 6.00 மணிக்கு மேல் உங்கள் குலதெய்வம் மற்றும் முன்னோரை மனதால் நினைத்து வீட்டு வாசலிலே அல்லது பூஜை அறையிலோ ஒரு தீபம் ஏற்றுங்க. இதனால் பெருமாளின் அருளுடன் முன்னோர்களின் ஆசியும் குடும்பத்திற்கு கிடைக்கும். தவிர்க முடியாத காரணத்தால் தர்பணம், திதி செய்ய முடியாதவர்கள் இதை அவசியம் செய்வது நல்லது. வாசலில் தீபம் ஏற்றுவதால் மீண்டும் பிதுர்லோகத்திற்கு இன்று திரும்பும் முன்னோர், சாபங்களை நீக்கி, அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்பை தருவர் என்பது நம்பிகை. ஒரு மண் அகல் விளக்கு அல்லது பச்சரிசி மாவினால் செய்த விளக்கை பயன்படுத்துவது சிறந்ததாகும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar