Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பணியில் விடுபட்ட மேற்கு ... மகாளய அமாவாசை: நீர் நிலைகளில் குவிந்த மக்கள் புனித நீராடி  முன்னோர்களுக்கு தர்ப்பணம்! மகாளய அமாவாசை: நீர் நிலைகளில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாளய அமாவாசை, முன்னோரை வணங்கி வழியனுப்புவோம்.. வளமுடன் வாழ்வோம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகாளய அமாவாசை, முன்னோரை வணங்கி வழியனுப்புவோம்.. வளமுடன் வாழ்வோம்!

பதிவு செய்த நாள்

10 அக்
2026
06:10

தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து மாதத்திலும் தர்ப்பணம் தந்த பலன் கிடைக்கும். முன்னோர்களின் உலகம் தெற்கு திசையில் இருப்பதால், அவர்கள் வாழும் உலகத்தை ‘தென்புலம் என்று குறிப்பிடுவர். பூலோகத்திற்கு தங்கள் பிள்ளைகளை பார்க்க வந்த முன்னோர் மீண்டும் பிதுர்லோகத்திற்கு இன்று திரும்புவதாக ஐதீகம்


இந்நாளில் தீர்த்தக் கரைகளில் நீராடுவதும், பிதுர் வழிபாடு செய்து அவர்களை  வழியனுப்பி வைப்பதும், குடும்பம் செல்வச்செழிப்புடன் வாழையடி வாழையாய் தழைக்கவும் உதவும். இந்நாளில் தீர்த்த ஸ்நானம் செய்வது, தர்ப்பணம் கொடுப்பது, பசுவுக்கு கீரை கொடுப்பது, காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் பிதுர்களின் ஆசி நமக்கு கிடைக்கும்.


ஒவ்வொரு மனிதனும், தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறான். ஒரு பிள்ளையை வளர்க்க பெற்றோர் செய்த தியாகத்திற்கு அளவே கிடையாது. அவர்கள் வாழும் காலத்தில், அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்வது  எவ்வளவு அவசியமோ, அதுபோல அவர்களின் வாழ்க்கைக்குப் பிறகும் இந்த நன்றிக்கடனைத் தொடரவேண்டும் என்கிறது சாஸ்திரம்.  அதற்காக பிதுர்கடனை ஏற்படுத்தி வைத்தனர். தர்ப்பணம், பிதுர்காரியம், முன்னோர்கடன் என்று பல பெயர்களில் இதைக் குறிப்பிடுவர்.  நன்றியுணர்வோடு, அவர்கள் மறைந்த மாதத்தின் திதியன்று சிரத்தையுடன் (மறக்காமல் கவனமுடன் ) செய்தல் அவசியம் என்பதால்  இதனை ‘சிரார்த்தம் என்றும் சொல்வார்கள். தெய்வப்புலவர் திருவள்ளுவர், தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல், தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை என்று திருக்குறளில் குறிப்பிடுகிறார். இதில் சொல்லப்படும் ‘தென்புலத்தார் என்பது மறைந்த முன்னோரையே குறிக்கும்.


தர்ப்பணத்தின் போது எள், ஜலம், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு ஆகியவற்றை பயன்படுத்துவர். இவற்றை பிதுர் தேவதைகள்  முன்னோர்களுக்குக் கொண்டு சேர்த்துவிடுவர் என்கிறது சாஸ்திரம். பூலோகத்திற்கு தங்கள் பிள்ளைகளை பார்க்க வந்த முன்னோர்  மீண்டும் பிதுர்லோகத்திற்கு இன்று திரும்புவதாக ஐதீகம். இந்நாளில் தீர்த்தக் கரைகளில் நீராடுவதும், பிதுர் வழிபாடு செய்து அவர்களை  வழியனுப்பி வைப்பதும், குடும்பம் செல்வச்செழிப்புடன் வாழவும், வாழையடி வாழையாய் தழைக்கவும் உதவும். இன்று வீட்டில் முன்னோரை நினைத்து குடும்பத்துடன் குல தெய்வத்தை வழிபடுங்கள்.. இரட்டிப்பு பலன் கிடைக்கும்!

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மகா தீபம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மலைமேல் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே 2500 அடி உயர பிரான்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.பாரி ஆண்ட ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த கார்த்திகை தீபத்திருவிழாவில், துாறல் மழையிலும் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் ஏற்றினர். செஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar