மயிலம்: மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று காலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள பாலசித்தர், வினாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர், மற்றும் நவகிரகங்களுக்கு அபிஷேகம், வழிபாடு நடந்தது.
காலை 11:00 மணிக்கு பால் பால் சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் பன்னீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மதியம் 12:00 மணிக்கு கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு உற்சவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் மலை வலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்தார். இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.