Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலத்தில் கிருத்திகை வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு

பதிவு செய்த நாள்

01 அக்
2026
12:10

விழுப்புரம்:

பாலமுருகன் கோவிலில் புரட்டாசி மாத கிருத்திகை வழிபாடு நடைபெற்றது. விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ., குடியிருப்பில் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் உள்ள மூலவர், உற்சவருக்கு புரட்டாசி மாத கிருத்திகையை யொட்டி, நேற்று மாலை 4:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.பின், மூலவர் பால முருகன், 5:30 மணிக்கு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, உற்சவர் சிறிய தேரில் கோவில் உட்பிரகாரத்தை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 6:00 மணிக்கு தீபாராதனையும், தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதமும், வினியோகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள், கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

வால்பாறை:

சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த புரட்டாசி மாத கிருத்திகை பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். புரட்டாசி மாதம் கிருத்திகை நாளான நேற்று, வால்பாறை நகரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 6:00 மணிக்கு பால், இளநீர், பன்னீர், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தன.

முடீஸ் சுப்ரமணிய சுவாமி கோவில், வாட்டர்பால்ஸ் பாலமுருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் புரட்டாசி கிருத்திகை பூஜையையொட்டி நேற்று காலை சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

திருப்போரூர்


திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவையொட்டி, வள்ளி – தெய்வானையுடன், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முருகர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar