கோவை: கோவை –சிறுவாணி சாலை ஆலாந்துறை அருகே உள்ள நாதேகவுண்டன் புதுாரில் அமைந்துள்ள கொங்குகாசி அஷ்ட பைரவர் கோயிலில் வரும் 3 நள்ளிரவு 1 மணிக்கு, முதல்கால யாக பூஜையும், பாலாபிஷேகமும், மோட்சதீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், பைரவர் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு சிவஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி ஸ்வாமிகள் தலைமை வகிக்கிறார்.